ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

வெற்றியின் வெளிச்சம் ! hard wok never fail



உன்னை  கவனிக்காத உலகத்தை ஒரு கலக்கு கலக்கு
அப்போதே உதிக்கும் உன் வீட்டில் கிழக்கு 
நீ உருவமில்லாதவன் என்ற நினைக்கிறாய் 
உயரும் எண்ணம் ஒன்றே உனக்கு உருவம் கொடுக்கும் 
பருவத்தை வீணாக்காதே .

சனி, 20 ஆகஸ்ட், 2011

முயற்சி செய்தால் try,try,try...


மாணவப் பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.


வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.​ நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.​ பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

இப்படியும் ஒருவரா ! amazing men

பரபரப்பான பழைய மகாபலி சாலையில் இரு கல்லூரி மாணவர்கள் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தனர் .நெடு நேரத்திற்கு பின் பேருந்து வந்தது அதில் ஒரு மாணவன் பேருந்தில் ஏறியவுடன் நடத்துனரிடம் "அண்ணா tidal park  ஒன்று தாங்க " என்றான்.பயண சீட்டின் விலை 6.50 ரூபாய் .
வழக்கம்போல் 10 ரூபாயை நீட்டி பயண சீட்டு வாங்கினான் .
என்ன ஆச்சரியம் 4 ரூபாயை நடத்துனர் திருப்பி கொடுத்தார் .
சில்லறைகளை தராத நடத்துனருக்கு இடையில் இப்படியும் ஒருவர்   என  என்னிடம் கூறி பூரிப்பு அடைந்தான் .
மறு நாள் நானும் என் நண்பனும் "sipcot" பேருந்து நிலையத்திற்கு வந்தோம். நேற்று பயணம் சென்ற அதே பேருந்து வந்தது . என்ன ஆச்சரியம் நேற்று வந்த அதே நடத்துனர் .என் நண்பன் நேற்று தரவேண்டிய 50 காசையும் சேர்த்து தந்தான் பூரிப்பில் நடத்துனர் .
இப்படியும் இக்காலத்தில் இரு நபர்களா என்று வியந்தேன்.